Pages

Friday, August 1, 2025

பூப்பாதை vs சிங்கப்பாதை

 பொதுவாக Software Engineering துறையில் Senior Tech Lead அல்லது Senior Consultant எனும் பதவியின் பின்னர் Junior Solutions Architect எனும் பதவி உயர்வும் பின்னர் Solutions Architect எனும் பதவி உயர்வும் அமையும்.

மென்பொறியியல் துறையில் இருக்கும் பலர் இப்பதவிகளின் பின்னால் திரிவதில்லை. அத கிழிச்சம்.. இத கிழிச்சம். ஊரில முதலாவது… நாங்களும் எஞ்சினியர் மார் எண்டெல்லாம் சொல்லிக்கு திறிற இல்லை.. இதுக்கு நேரமும் இல்லை… வேலையின் மீதுள்ள தீராத பற்று காரணமாக வேலை செஞ்சோமா உழைச்சோமா செலவழிச்சோமா fun எடுத்தோமா புள்ளை குட்டிகளை படிக்க வைச்சோமா என்று இருப்பர்.
விடயத்துக்கு வருவோமெ; எனது வேலைத்தளத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட Junior Architect மற்றும் Solutions Architect எனும் இரு தொடர்ச்சியாக அமையப்பெற்றுள்ள பதவி வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டிந்தன.
நானும் விண்ணப்பித்திருந்தேன். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நேர்முக பரீட்சைகள், பயன்பாட்டு ஆய்வு என பல சுற்றுக்கு பிறகு “நான் Junior Architect தகுதிக்கு அதிகமாகவும் Solutions Architect தகுதியினை பூர்த்தி செய்யவில்லை. Qualified above Associate Architect and Below to be Solutions Architect” எனவும் பெறுபேறு கிடைக்கப்பட்டது.
குதர்க்கமான பெறுபேற்றை தொடர்ந்து இரு தெரிவுகள் என் முன் வழங்கப்பட்டன.. பூப்பாதை, மற்றையது சிங்கப்பாதை!!!
1️⃣ பூப்பாதை: Junior Solutions Architect பதவியை ஏற்கலாம்
2️⃣ சிங்கப்பாதை: சவாலான பாதை. தற்போதைய Senior Digital Consultant ஆகவே தொடர்ந்தும், அதே நேரத்தில் Solutions Architect போல செயல்பட்டு முக்கியமான KPIs (செயல் திறன் குறியீடுகளை) பூர்த்தி செய்ய வேண்டும் - அடைய முடியவில்லை என்றால், மீண்டும் பழைய Senior Digital Consultant நிலைக்கு திரும்பவேண்டும்.
நமக்கு கொழுப்பு தானே சிங்கம் சிங்கிளாதான் செல்லும் எண்டு தேர்தெடுத்தது இரண்டாவது பாதையினை.
கடந்த 8 மாதங்களாக இரண்டு பதவி நிலைகளிலும் வேலை செய்து; நான் Solutions Architect ஆக வரத்தகுதியானவன் என்பதை நிரூபித்தேன். அல்ஹம்துலில்லாஹ்… Solutions Architect எனும் பதவியேற்றத்தினையும் பெற்றேன்.
இனி என்ன?? அதில மாங்கு மாங்கு என்று வேலை செய்யனும்… அதிலும் Artificial Intelligence இனை என்னெண்டு ஒரு கை பாக்கலாம் எண்டு நினைச்சிருக்கன்… இன்ஷா அல்லாஹ்…
இவ்வினிய செய்தியினை அன்பர்கள் நண்பர்களுக்கும் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.
பலர் சந்தோசப்பட.. சிலர் ஹா ஹா போட… இந்த போஸ்ட் நிண்டு ஆடட்டும்..
Starting my AI journey — not just to follow trends, but to build what’s next.




No comments:

Post a Comment